Saturday, January 08, 2011

IPL 4 : விலை போன வீரர்களும், விலை போகா சரக்குகளும்


IPL 4 ற்கான வீரர்கள் ஏலம் ஜரூராக ஆரம்பித்துவிட்டது. ஏதோ பண்டம் பாத்திரம் வாங்குவது போல மனிதர்கள் ஏலம் விடப்படுவது சிரிப்பை வரவைத்தாலும் கொடுக்கப்படும் விலையினை பார்க்கின்ற போது.. யப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!! இதோ வீரர்களினை வாங்கிய அணியும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையும். ( டொலரில் உள்ளதை பெருக்கி பார்த்துக்கோங்கோ மக்களே! இதய பலவீனம் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம்… )) )

முதலில் ஏலம் விடப்பட்ட வீரர் Gambhir பலத்த போட்டியின் மத்தியில் Kolkata அணி $2.4 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது தற்போதுள்ளதன் படி இதுவே அதி கூடிய ஏலத்தொகையாகவும் உள்ளது.

சென்ற முறை வெற்றிகரமாக சொதப்பிய Dilshan இம்முறை Bangalore அணியினால் 650,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார. அதோடு Zaheer Khan ம் அதே அணிக்காக $900,000 ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் Ross Taylor Rajasthan Royal அணியினால் $1 million விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டார்..

அதிரடி துடுப்பாட்ட வீரர் Yusuf Pathan க்கான ஏலம் அனைத்து அணிக்கிடையிலும் பெரும் போட்டியாக இருந்தது. அனைத்து அணியும் அவரை வாங்குவதில் மும்மூரம் காட்டின. ஆனால் இறுதியில் அவரை $2.1 million dollars கொடுத்து  Kolkata பெற்றுக்கொண்டது. இது இன்றைய ஏலத்தில் இரண்டாவது பெரிய தொகையாகும். அதோடு இவரது சகோதரர் Irfan Pathan னை வாங்குவதிலும் பெரும் போட்டி நிலவியது. இறுதியில் Irfan Pathan ஐ டெல்லி அணி $1.9 million dollars கொடுத்துப் பெற்றுகொண்டது. பதான் சகோதரர்கள் காட்டில் இம்முறை அடை மழைதான்!!! இருவருக்கும் சேர்த்து 4 மில்லியன் டொலர்கள்…

இங்கிலாந்தின் Kevin Pietersen, $650,000 களுக்கு Deccan Chargers னால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அதன் பின் இலங்கையின் Mahela Jayawardene , IPL ல் புதிதாக இணைந்துள்ள Kochi அணியினால் $1.5 million dollars களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் இவர் சென்ற முறை ஏலத்தில் 475,000$ களுக்கு ஏலம் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக தற்போது ஆடுகளங்களில் சொதப்பி வந்தாலும் Yuvraj Singh ற்கான ஏலம் ரொம்ப சூடாகவே இருந்தது. புதிதாக IPL இல் இணைந்துள்ள Pune அணி அவரை $1.8 million dollars களுக்கு வாங்கியது.

தென்னாபிரிக்காவின் AB de Villiers $1.1 million dollars, களுக்கு Bangalore அணியினால் வாங்கப்பட்டார்.

அதன் பின் இன்று முதல் ஆஸ்திரேலியா வீரராக ஏலம் விடப்பட்ட வீரர் Cameron White  $ 1.1 million dollars களுக்காக Deccan Chargers அணிக்காக வாங்கப்பட்டார்.

தென்னாபிரிக்காவின் சகல துறை வீரர் Kallis, Kolkata அணியினால் 1.1 million dollars களுக்கு வாங்கப்பட்டார்.

இந்தியாவின் அதிரடி வீரர் Rohit Sharma வுக்கான ஏலமும் இம்முறை மிக்க போட்டியாக இருந்தது. அவரை ஏலம் எடுப்பதில் சென்னையும் மும்பையும் இறுதிவரை போட்டியிட்டு, இறுதியாக மும்பை அதில் வென்றது. அவருக்கு கொடுக்கப்பட்ட விலை $2 million dollars.

இம்முறை Andrew Symonds ம் சர்ச்சை நாயகன் ஹர்பஜனும் ஒரே அணியில் விளயாடும் நிலை தோன்றியுள்ளது. ஆமாம்! Andrew Symonds ஐயும் Mumbai Indians  $850,000 களுக்கு வாங்கியுள்ளது. ஏதாவது பத்திக்குமா என்று பார்க்கலாம்!!

இலங்கை அணியின் தலைவரும் பஞ்சாம் அணியின் தலைவருமான Kumar Sangakkara,  $700,000 களுக்கு Deccan Chargers னால் ஏலம் எடுக்கப்பட்டார். சென்ற முறை டெக்கானின் அணித்தலைவரான Adam Gilchrist, இம்முறை Punjab அணியினால் $900,000 களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இரு அணித்தலைவர்களும் பரஸ்பரம் அடுத்த அணிக்காக விளாஇயாட வேண்டியவாறு IPL 4 மாறியுள்ளதும் ஒரு சுவாரசியமான நிகழ்வாக உள்ளது. இது இன்றைய ஏலத்தில் முதன் முதலாக பஞ்சாப் அணியினால் மேற்கொள்ளப்பட்ட ஏலமாகும்.

Rahul Dravid Rajasthan Royals னால் $500,000 களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரது முன்பய அணியான Bangaloreனாணி அவரை ஏலம் எடுப்பதில் எந்த ஒரு அக்கறையினையும் எடுக்கவில்லை.

Pune அணி, தென்னாபிரிக்க அணித்தலைவர் Graeme Smith னை  $500,000 களுக்கு ஏலத்தில் பெற்றது அதோடு புனே அணி அதிரடிக்கு பேர் போன Robin Uthappa வினை பலத்த போட்டிக்கு மத்தியில் $ 2.1 million தொஅகைக்கு ஏலத்தில் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் T20 தலைவர் Johan Botha Rajasthan Royals அணியினால்  $950,000 க்கு வாங்கப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணியின் தூண் VVS Laxman க்கு அணிகளுக்கிடையே அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை. Kochi அணி அவரை ஆரம்ப தொகையான $400,000 களுக்கு எந்த ஒரு போட்டியும் இன்றி எடுத்துக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் தலைவர் Vettori னை வாங்குவதில் Pune க்கும்  Bangalore க்கும் இடையில் பலத்த போட்டி இருந்தது இறுதியில் பெங்களூர் $550,000 களுக்கு அவரை வாங்கியது. Vettori ன் சக வீரரான, அதிரடி வீரர் McCullum ற்கும் இம்முறை அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை. $475,000 மாத்திரம் Kochi அவரை வாங்கியது.

சொந்த ஊர்க்காரரான சிறிசாந்த் இனை வாங்குவதில் Kochi அணி வெற்றி பெற்றது. $900,000 கள் அவருக்கான விலையாக நிர்ணயிக்கப்பட்டு அவரை சொந்த மாநில அணி பெற்றுக் கொண்டது.அதோடு மற்றொரு பந்து வீச்சாளரான RP Singh னையும் Kochi அணி $500,000 களுக்கு பெற்றுக்கொண்டது.

விலைபோக வீரர்கள்

முன்னாள் கொல்கத்தா அணித்தலைவர் Sourav Ganguly னை எந்த ஒரு அணியும் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இது அனைவராலும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் மேற்கிந்திய அதிரடி நாயகன் Chris Gayle க்குக்கூட இதே நிலை ஏற்பட்டது அனைவராலும் ஆச்சரியத்துடன் நோக்கப்படுகின்றது. தற்போது கெயில் சரியான போமில் இல்லை என்ற காரணத்துடன், மேற்கிந்திய கிரிக்கட் சபையுடனான முறுகல் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஏலம் தொடர்கின்றது...........................



7 comments:

Jana said...

சீசன் -4 ஐ.பி.எல். ஏலம் பல ஆச்சரியங்களை தந்திருக்கின்றது.
கௌதம் கம்பீரின் டிமான்ட் எதிர் பார்த்ததுதான்.
தேடிக்கொண்டிருந்த விடயம் சம்பந்தமான நல்தொரு பதிவு. நன்றி.

THOPPITHOPPI said...

கங்கூலி விலைப்போகதது வருத்தமே

FARHAN said...

இந்த ipl செம கலக்கல்

Anonymous said...

maramalai u s a.uttaappa most sixes last year thank u

Unknown said...

ஐ.பி.எல். ஏலத்தை நேரடி ஒளிபரப்பு செய்தது போல் உள்ளது உங்கள் பதிவு, .

Unknown said...

உங்கள் வலைப்பதிவுக்கு முதல் முறையாக வருகிறோம், நன்றாக வடிவமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

கொல்கத்தா இளவரசன், வங்கப் புலி, தாதா நிலைமைதான் பாவம் எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார்