ஐஸ் கிறீமுக்கு ஏது இலக்கணம். பெரியோர் முதல் சிறியோர் வரை சப்புக்கொட்டும் ஐஸ் கிறீமுக்கு இன்று ஒரு நாள்- பிறந்த நாள் போல…
இதை 1984ல் அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் ஆரம்பித்து வைத்தார். அதுவும் ஜூலை மாதத்தினை ஐஸ்கிறீம் மாதமாகவே பிரகடனம் செய்துள்ளார். ( அடிக்கிற வெயிலுக்கு அதான் சரி..) ஐஸ்கிறீம் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு – ஐஸ்கிறீம் தினம். அதாவது இன்று.
ஆகவே மக்களே, இன்னைக்கு கஞ்சத்தனம், கருமித்தனம், டயட் அது இது எல்லாம் மறந்து ஐஸ்கிறீம் தினத்தை ஐஸ்கிறீம் சாப்பிட்டு கொண்டாடுவோம். ( நமக்கு எல்லா நாளும் ஐஸ்கிறீம் டே தான்…………)
1 comment:
இதுக்கு ஒரு தினமா!! நல்லது..
Post a Comment