என் கனவுகளும் எதிர்காலமும்

அதோ அம்மலைகளின் பின்
என் கனவுகள் உள்ளன என எதிர்காலத்திடம் சொன்னேன்.
நீண்ட ஒரு சிரிப்பொலியுடன் அது என்னை கடந்து சென்றது.
கோபம் தலைக்கேற,
தீர்க்கமாக என் கைகளினை நீட்டினேன் - அம்மலையினை நோக்கி
இப்போது மௌனம்,
பின்,
சிறிய கேவலுடன் அது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.
எதுவும் சொல்லத்தோன்றாமல்,
அவ்வழுகையின் பிற்பாடு கூட
இன்னும் என் கை அத்திசையினை நோக்கியே நீண்டவாறு உள்ளது.Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

கடிதங்களினையும் காக்கைகளினையும் தின்ற தொலைபேசிகள்