Sunday, July 11, 2010

மனிதன் புரிவதில்லை

மனிதன் புரிவதில்லை

முகம் முழுதும் சிந்தனை கோடுகள்
கால்கள் நடக்க..
உலகம் உழல்கிறது.

யார் மீதும் யாருக்கும் அக்கறையில்லை.
சாலையோர மனிதர்கள்,
கையேந்தும் பிஞ்சுகள்,
புதினம் மட்டுமே...

ஆயிரம் சிந்தனைகள்
அவரவரை சூழ...
உலகம் மறந்த நிலையில்
அவர் அவர் உலகில்...

ஆனாலும்..
ஆடை இறங்கி
ஓர் நங்கை அருகில் சென்றால்..
அனைத்தும் மறக்கும்.
அடிக்கடி கண் அங்கே பறக்கும்.

மனங்களின் மாயங்கள்
மனிதன் புரிவதில்லை
__________________

2 comments:

Katz said...

same blood

ப்ரியமுடன் வசந்த் said...

புரியாததால்தான் இன்னும் கரையேற முடியாமல் நீந்திக்கொண்டே இருக்கிறோம்...