1. அபுதாபியில் இன்று வெப்ப நிலை 47°C. நெருப்பள்ளி இறைத்தது போல இருந்தது. உணவு வேளைக்கு அறைக்கு செல்லும் போது.. அப்பா..இப்படியான நேரங்களில்தான் வெறுப்பு வந்து ஒட்டிக்கொள்ளும். ஏசிக்குள்ளே இருந்துவிட்டு கொஞ்ச நேரம் இச்சூட்டினை தாங்கவே இவ்வளவு வேதனை என்றால். இங்குள்ள கட்டிட மற்றும் துப்பரவுத்தொழிலாளர்களின் நிலை.... மிகப்பரிதாபம்.உழைக்க இன்னும் எதை எல்லாம் இழக்க இருக்கின்றொமோ தெரியவில்லை.
2. என்னோடு அறையில் இருக்கும் நண்பர் ஒருவர் கணிய அளவையிலாளர். நேற்று க்காலையில் ஜோகிங் போகும் போது, அவரது கம்பனிக்கு வந்துள்ள புதிய கட்டிட ப்ரஜக்ட் பற்றி பேசிக்கொண்டு வந்தார். அதில் அவர் சொன்ன விசயம் ரொம்ப சிரிப்பா இருந்தது. அதாவது, அந்த பில்டிங்க் 2 ஏக்கரில் வருகின்றதாம். 5000 டாய்லட் கள் உண்டாம். அதில் விஐபி டாய்லட் கள் கூட உண்டாம், அடப்பாவிகளா!!!!!!! டாய்லட் ல என்னடா விஐபி.. ஆய் போறதுக்கு என்னடா டீலக்ஸ் நொன் டீலக்ஸ்,. நாயகன் படத்துல நாசர் சொல்ற மாதிரி. “ சந்தனம் மிஞ்சிப்போனா ..................ல தேச்சுக்குற மாதிரி..”
3. தீபம் தொலைக்காட்சி பார்க்க நேரிட்டது. புலம்பெயர் தமிழர்களால் பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி என கேள்விப்பட்டிருந்த்தால், சில பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால். ம்ஹூம் வறட்சி.. வறட்சி ....வறட்சி மட்டுமே.. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஜெயா , விஜய் ரீவி களின் நிகழ்ச்சிகள். வேறு பெரிதாக ஒன்றையும் காணோம்.
4. சிலர் எப்போதும் பழைய புண்களை நோண்டுவதில் அலதிப்பிரியம். மற்றவர்கள் பற்றி சிந்திக்காத நிறைய ஜீவன்கள் உலவுகின்றன. நீண்ட நாட்களுக்கு பின் என்னோடு படித்த ஒரு நண்பனை Face Book மூலமாக காணக்கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் என்பதால், மிக்க மகிழ்ச்சி, தொடர்பினை ஏற்படுத்தி கதைக்க தொடங்கிய சில நிமிடங்களில், மேற் சொன்னவாறு கிளற ஆரம்பித்துவிட்டான். ஒரே ஆயாசமாக் போய்விட்ட்து. நாசூக்காக கதையினை மாற்றிப்பார்த்தும் பயனில்லை. இறுதியில் ஏதோ பொய் சொல்லி அவனிடமிருந்து கழர வேண்டியதாயிற்று. நீண்ட காலங்களின் பின் சந்தித்த மகிழ்ச்சி ஒரு நொடியிலேயே இல்லாமல் போய் விட்டது.
5. சில பாடல்களினை கேட்கும் போது அதன் வரிகள் மட்டுமல்லாமல், சில காட்சிகளும் திடீரென ஈர்க்கும். நேற்று முதல் மரியாதை திரைப்பட்த்தில் இடம்பெறும், “ அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்…” என்ற பாடலினை பார்த்துக்கொண்டிருந்த போது அது எனக்கு நிகழ்ந்தது.
இந்தப்பாடலில் 1.26 நிமிடத்திலிருந்து 1.40லிருந்து வரு காட்சிகள் என்னை மிகவும் பாதித்த சில காட்சிகள் வருகின்றன. அதில் அந்தப் பெண் நடிகையின் முக பாவம் மிக அருமை க்யூட். அந்த கண்களில் உண்மையான காதல் வழிகின்றது.
4 comments:
நல்லாதான் எழுதிறீங்க!!!
நன்றிகள் நண்பரே
//நாயகன் படத்துல...//
தேவர் மகன்???
http://vaarththai.wordpress.com
வார்த்தை said...
//நாயகன் படத்துல...//
தேவர் மகன்???//
நன்றிகள் நண்பரே.... இரண்டும் குழம்பிவிட்டது. தவறினை சுட்டியமைக்கு நன்றி
Post a Comment