தொலைபேசிகள் மௌனிக்கும் போது
எனக்குள் சில திணுக்கிடல்கள் ஏற்படுகின்றன.
கவலைகள் சூழ்கின்றன.
ஒரு குழந்தை போல அதை வெறித்தவாறு நிற்கின்றேன்.
இதோ எனக்கான அழைப்பு வருகின்றது என்ற பிரமையுடன்.
ஆனால் அது மௌனித்தவாறே இருக்கின்றது.
நீண்ட மௌனம் எனக்கும் என் தொலைபேசிக்கும்
அதன் வெற்றி பற்றி எப்போதும் கவலை கொள்கின்றேன்.
ஆனாலும் அது நிகழவில்லை.
அறையில் நானும் என் தொலைபேசியும் மௌனமும்
வேறு எந்த பிரசன்ன்ஙகளினையும் நாங்கள் விரும்பவில்லை.
என் காத்திருப்பு நீண்டே போகின்றது.
ஆனாலும் அது முடிவதாக இல்லை.
3 comments:
அனுதாபம், ஏக்கம் கொண்ட கவிதைகள், எப்போதும் ஏதோ ஒருவகையில் இதயத்தில் கனத்துவிடுகின்றன. அதேபோல உங்கள் மௌனித்த தொலைபேசிக்கவிதையையும் குறிப்படலாம்.
தங்கள் வரிகள் வலிகளை புரியவைக்கின்றன. பாராட்டுக்கள் சகோதரா...
//கவனம்...அந்த தொலைபேசி இனி அலற ஆரம்பித்துவிட்டால், அழைப்புக்கள் அடுத்தடுத்துவந்துவிட்டால்
நீங்களே அதை நிரந்தரமாக மௌனித்துவைக்கவேண்டிய சூழ்நிலையும் எற்பட்டுவிடும் (நகைச்சுவைக்காக)//
மிக்க நன்றி ஜனா!
//கவனம்...அந்த தொலைபேசி இனி அலற ஆரம்பித்துவிட்டால், அழைப்புக்கள் அடுத்தடுத்துவந்துவிட்டால்
நீங்களே அதை நிரந்தரமாக மௌனித்துவைக்கவேண்டிய சூழ்நிலையும் எற்பட்டுவிடும் (நகைச்சுவைக்காக)//
நீண்ட தொலைவில் தனிமை தரும் வலியில் அடிக்கடி தொலைபேசி லிப்பதையே நான் விரும்புகின்றேன்..... உங்கள் நகைச்சுவையினை ரசித்தேன்.. நன்றிகள் மீண்டும்
Very Touching.. Poem.
Post a Comment