Monday, July 05, 2010

தனிமை கொல்லும் நட்புக்கள்

தொலைதூர வாழ்வில்,
அயர்ச்சிகள் தரும் நேரம்
வாழ்க்கை மெல்ல அலுக்கும் தருணங்களில்,
அவ்வழைப்புகள் வரும்
நட்புடன் நக்கலும் கலந்து..
ஊர்க்கதை பேசி,
திருமண திட்டங்கள் வகுத்து,
இன்னும் தோன்ற தோன்ற
பேசி முடியும் வேளைகளில்
உற்சாகம் தொற்றிக்கொள்ள
ஓரிரு நாளினை ஓட்டலாம்.

நாட்கள் நகரும் சக்கரமாய் நிற்பான்
எப்போதோ சந்திக்கும் போது
மெலிதாய் மலரும் ஒரு சுகானுபவம்.
ஒன்றாய் உண்டு களித்து,
ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும்,
காரணமின்றி சிரித்துக்கொண்டும்
களைப்புடன் அறை நோக்கி பஸ் ஏறுகையில்,
ஊர் நினைவுகள் பாரமாய் அழுந்தும்.

தூர தேசங்கள் தரும் தனிமையின் வலி மருந்துகளாய்
இன்னும் நிற்பர் என் நண்பர்கள்
சமீர், றிஸாட் , ஹாசீர் எனப்பலரும்…


2 comments:

பனித்துளி சங்கர் said...

கவிதை அருமை . வார்த்தைகள் தொடுத்த விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Admin said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே