வலைப்பூ தொடங்கி நான்கு வருசமானாலும், இப்போதான் இப்பதிவுலகினுள் ஓரளவு பிரவேசிக்க முடிந்துள்ளது. முடிந்த வரை பல பதிவர்களின் வலைப்பூக்களுக்குள் மேய்ந்து கொண்டிருக்கின்றேன். அங்கெல்லாம அடிக்கடி பிரயோக்கிக்கப்படும் வார்த்தை – பதிவுலக அரசியல்.
அப்பிடீன்னா என்னாங்க? எப்பிடியான அரசியல் அது? கருத்தாடல்களில் என்ன அரசியல் வரப்போகுது? பிடிச்சா ஏத்துக்குவாங்க.. பிடிக்கலேன்னா விட்டுட்டு போக வேண்டியதுதானே? மிஞ்சிப்போனா ஏதாவது ஒரு பின்னூட்டம்.. இதுல எங்க அரசியல் வரப்போகுது?
தனிப்பட்ட தாக்குதல் ரொம்ப கேவலமானது. சிலரின் எழுத்துக்களில் வன்மம் மட்டும்தான் தெரியுது.. இதான் நீங்க எல்லோரும் சொல்ற அரசியலா? எதுக்கு இப்பிடி எல்லாம்? இதால யாருக்கு லாபம்? ஜாலியா வந்தமா படிச்சமா போனமா? நமக்கு புரிஞ்ச மாதிரி, தெரிஞ்ச மாதிரி ரெண்டு பதிவ போட்டமா? யாரையாவது ச்சும்மா கலாய்ச்சமா? எண்டில்லாம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா??
கருத்து மோதல்கள் , நிச்சயமா தேவை. அது ரொம்ப ஆரோக்கியமா இருந்தா எல்லோருக்கும் நன்மை. அப்பிடி இல்லாம – குழாயடி சண்ட போல இருந்தா எப்பிடீங்க?
ஆனாலும், இதுல சண்டைதானே இருக்கு- அரசியல் எங்க வருது? ஒருவேள சண்டை போடுறதுதான் பதிவுலக அரசியலோ??
பெரியவங்க நிறைய இருக்கிற இப்பதிவுலகத்தில சிறியவன் மனசுல பட்டத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்கோ ஐயாமாரே…………………
2 comments:
நால்லவே சொல்லிருக்கீங்க.
"தட்டி கேட்க ஆளு இல்லன்னா
தம்பி சண்ட பிரசண்டன் "
வேறு ஒன்னும் இல்லை. கண்ணியமான பதிவர்கள் இவர்களை
ஒதுக்கி வைத்தாலே போது. இந்த "பயங்கரவாதிகளுக்கு " கூஜா தூக்கும்
அடிவருடிகளும் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்.
எக்காரணம் கொண்டும் இவர்களின் "வலை" பக்கம் போகாமல்
நாம் நம் வேலையை பார்த்தாலே போதும். இந்த "மழை கால காளான்கள் "
மறைத்துவிடும்.
நல்லா சொன்னீங்க சர்ஹூன்..
ஆனா நாய் வாலையும் பதிவுலகத்தையும் திருத்த முடியாது..
நாம நம் வேலையைப் பார்ப்போம்..
Post a Comment