துபாயில் தற்போது, மீன் பிடிப்பதற்கு லைசன்ஸ் வழங்கும் நடைமுறை இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. வர்த்தகரீதியாக அல்லாமல் பொழுது போக்காக மீன் பிடித்தலினை (Fishing)மேற்கொள்ளும் நபர்களுக்கும் இது அமுலாக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க அனுமதிக்க கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் ,
1. துபாயில் வதிவிட விசா பெற்றவர்களாக,
2. வேறு எமிரேட்சில் விசா பெற்றிருந்தும் துபாயில் வசிப்பதை உறுதிப்படுத்துவராக
இருக்க வேண்டும் என துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதாவது, துபாயில் வசிப்பவர்கள் மட்டுமே துபாய் கடல் பரப்பில் மீன் பிடிக்கலாம்.
அனுமதிப்பத்திரம் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனாலும் அனுமதிப்பத்திரம் இன்றி மீன் பிடிப்போர், முதல் தடவை எச்சரிக்கப்பட்டு, பின்னர். ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகின்றனர்.
இது, கடல் வளத்தினையும், சுற்றுச்சூழலினையும் ஒழுங்கமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும்,
இதே சட்ட திட்டங்கள், ஐக்கிய அரபு ராச்சியத்தின் ஏனைய எமிரேட்ஸ் களிலும் அமுலாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.
1 comment:
Very good.
Post a Comment