Wednesday, June 16, 2010

எனக்குப் பிடித்த பாடல்கள்

சில பாடல்கள் கேட்கும் போது இன்னும் இன்னும் என்று போய்க்கொண்டே இருக்கும். அது எதனால் என்றால் எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனாலும் அவ்வனுபவத்தினை நான் பலமுறை பெற்றுள்ளேன். அவ்வாறான சில பாடல்களினை உங்களோடு பகிரலாம் என எண்ணுகின்றேன்.



1.   உன்கண்ணில் நீர் வழிந்தால்..



உயிரினை உருக்கும் ஒரு பாடல், பாரதியின் கவி வரியில் ஆரம்பிக்கும் அப்பாடலின் ஒவொரு வரிகளும்.. அதில் உள்ள அர்த்தங்களும். அபாரம் என்றால், அதில் சிவாஜி, பத்மினி ஆகியோரின் நடிப்பு இன்னும் விசேசம்.


“…………………… வீழும் கண்ணீர் துடைப்பாய். அதில் என் விம்மல் தணியுமடி..” என்பது போன்ற வரிகள் கேட்கும் போதே என்னவெல்லாமோ பேசிச்செல்கின்றது.

2.   தெய்வம் தந்த வீடு …………………


அமைதியான ஒரு இரவில் அனைத்து சத்தங்களினையும் தவிர்த்து விட்டு, தனிமையில் இதை கேளுங்கள். இவ்வனுபவம் பலருக்கும் இருக்கலாம்.. இதற்கு மேல் இப்பாடல் பற்றி சொல்ல ஏதுமில்லை.


ஒவ்வொரு வரிகளும் கேட்கும் போது, வாழ்வின் சாரங்கள் விளங்கும்.





3.   புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


ஒரு பக்திப்பாடல்.இதில் எது என்னைக்கவர்ந்தது என்பதில் இப்போதும் நான் குழம்பிக்கொள்கின்றேன்
அது வரிகளாஇல்லை இசையாஇதுவரை புரியவில்லை
இப்பாடலினை கேட்கும் போதுஎதுவோ உள்ளே உருகுவது போல ஒரு உணர்வு.. 
இல்லை அது வேறு எதுவோ.. எப்படி அதனை வர்ணிப்பது என அறியேன்.



இப்பாடல் பற்றி பல குற்றச்சாட்டுக்கள் / ஆச்சரியங்கள் என்னை சூழ உள்ளவர்களால் எழுப்பப்டுகின்றனவேறொன்றுமில்லைநான் இந்து அல்ல
அடஒரு பாடலை ரசிப்பதற்கு எதற்கு மத அடையாளம்அது பக்திப்பாடலாக இருக்கட்டும்.. இல்லை வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும்.. பிடித்திருந்தால் ரசிக்க வேண்டியதுதானே.



















.





4.   ராஜ ராஜ சோழன் நான்


இது பல நினைவுகளினை புரட்டிப்போடுகின்ற ஒரு பாடல்அதுதான்.. எனது கல்லூரிக்காலங்களினை..



“கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே,


கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…”



என்ற வரிகள் எத்தனை தடவை என்னைத் தொல்லைப்படுத்தியுள்ளன என்பது எனக்கும் அவளுக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள்.. இது எனது ஞாபகங்களினை துயிலெழுப்பும் பள்ளியெழுச்சி.. சில வேளைகளில் இப்பாடலினை கேட்பதில் உண்டாகும் வலியினை நினைத்து சபித்துள்ளேன். இனி இதை கேட்பதில்லை என்ற சபதங்கள் பல இன்னும் கிடப்பில் கிடக்கின்றன.







5.   நிலா காய்கிறது…. நேரம் போகிறது,
அழகியலினை சொல்லும் பாடல்… வேறொன்றும் சொல்வதற்கில்லை.. நீங்களும் அனுபவியுங்கள்…







2 comments:

Riyas said...

எல்லா பாடல்களுமே என்னைக்கவர்ந்தவை.. அதிலும் ராஜ ராஜ சோழன் மிக அருமை..

இந்த பாடலை பற்றி நான் எழுதிய பதிவு.
http://riyasdreams.blogspot.com/2010/04/blog-post.html

துரோகி said...

ஆஹா... அப்பிடியே எண்ட selection!
ராஜ ராஜ சோழன்... மு.மேத்தா எழுதின பாட்டு... ஏனோ தெரியல்ல தமிழ் சினிமா அவர சரியா பாவிக்கல்ல இல்ல எண்டு நினைக்கிறான்.

நிலா காய்கிறது... ஹரிஹரன்ட குரலை விட ஹரினிட குரல்ல நல்லா இருக்கிறதா படுது!