Saturday, June 19, 2010

முருகனின் மூன்றாம் மனைவியும், போகர் சித்தரும் : கதையல்ல இது ஒரு காமெடி

போன வாரம்கதையல்ல நிஜம்பார்க்க கிடைத்தது. சில வேளைகளில் எதிர்பாராமல் கிடைக்கும் சுவாரசியங்களில் ஒன்றாக அன்றைய நிகழ்ச்சி அமைந்து போனது. இப்போதுள்ள சூடான விசயம்தான்- சாமியார்கள்.. ஆனா ரொம்ப கொமடியா ( காமடி!!!!! ) இருந்தது.

கண்ணீரும் கம்பலையுமாகவும், வினோத மனிதர்களினையும் சில வேளைகளில் எமக்கு சந்திக்க கிடைக்கும். அப்படி கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான் இந்நிகழ்ச்சியிலும் எனக்கு அதுதான் நடந்த்து.

இந்நிகழ்ச்சிக்கு இரு பெண்கள் வந்திருந்தனர்.

ஒருவர் – முருகப்பெருமானின் மனைவி ( ????!!?? அட! சத்தியமங்க.. அவங்க அப்பிடித்தான் சொன்னாங்க)

மற்றவர் – போகரின் வாரிசு

கச்சேரி முதாலமவரிலிருந்து ஆரம்பமாச்சு..

அந்த பொம்பிளையினை ஊரே நடத்தை சரியில்லை என்று ஒதுக்கி வைத்ததில் ஆரம்பித்தது. ( அச்சந்தர்ப்பத்தில் லட்சுமி தனிமனித ஒழுக்கம் மீதான குற்றச்சாட்டு என அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். அம்மையார் எதையாவது நிறுவ விரும்புகின்றாரா?? )

பின் அப்பெண்மணி… இப்பதான் கச்சேரியே ஆரம்பமாச்சு..
அந்தம்மா.. தாந்தான் முருகனின் மூன்றாவது மனைவி என போட்டுச்சே ஒரு போடு. அதுவ்ம் கல்யாணம் நடந்த தேதி வாரியா சொல்லிக்கொண்டிருக்க. இதென்னடா கூத்து!!!!!!!!!!! இதோட சிவனையும் பார்வதியும் பிரிஞ்சிருந்தாங்களாம் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சதே இந்த அம்மாதானாம். எல்லோரும் சிரிக்கிறாங்க.. ஆனா அது மட்டும் ரொம்ப சீரியசா பேசிக்கிட்டே இருக்கு.. இலங்கையில நடந்த யுத்தத்துல குண்டு போடாம செஞ்சிச்சாம், கப்பல செயலிழக்கச்செஞ்சிச்சாம். ( இது தமிழக முதல்வருக்கு தெரியுமா???? ) மந்திரம் கத்திருக்காம். ஹ்ஹ்ஹ் முடியலடா முருகா………. ஆனா அதுல இன்னொரு விசயம்.. 

அந்தம்மா இவ்வளவும் செய்யுது ஆனா அதுட சொத்துப்பிரச்சினை மட்டும் அப்பிடியே முடிக்க முடியாம கிடக்காம். கடவுள்ட மனைவியே இருந்தா அன்றாடங்காய்ச்சிங்க நிலம என்னப்பா ஆகுறது??

அப்புறம் இன்னொரு அம்மா – சித்தர் போகரின் ஆத்மா அவர் உடம்புக்குள் இருக்காம்.. 

லட்சுமி போகர் பற்றி கேட்டதும், அந்தம்மா.. கண்ண விரிச்சி     ( ஜோதிகா கூட இப்பிடி செஞ்சிருக்குமா தெரியாது … ) மூச்சு வாங்க வாங்க என்ன்வெல்லாமோ சொல்லிச்சு.. அப்புறம்தான் புரிஞ்சது.. அங்க பேசினது அந்தம்மா இல்லையாமாம்.. அது – போகர் சித்தராம்..  லட்சுமியும் விடுவதாயில்லை.. அந்த நவ பாசாணங்கள் பற்றி கேட்டவுடன், அந்தம்மா – ஒன்னிலிருந்து மூனாவது வர சொல்லிட்டு, அப்பால திணற தொடங்கிற்று. பின்ன சுதாரிச்சி அது முழுசா சொன்னா சாமி குத்தம், மக்கள் தவறா பிரயோகிப்பாங்க என உட்டுச்சு ஒரு கரடி.. லட்சுமி விடாம நோண்டியதும் அந்தம்மா தன்ர எடுபிடி ( பாவம் அந்த வயசான ஆள் ) கூப்பிட்டு எழுதி வச்சிருக்கிறத கொடுக்கச்சொல்லுது. லட்சுமி விடுவதா இல்ல.. நான் பார்த்தா மட்டும் தப்பா பாவிக்க மாட்டேனா என கிடுக்கி போட.. போகர் சித்தரின் நிலம – ம்ஹூம்… வேணா விட்ரு நிலமதான்.

இதுல கிளைமேக்ஸ் தான் சூப்பர்.. பதில் சொல்லி மாளலல்ல அந்தம்மாக்கு.. எனக்கு முதல்வன் படத்துல அர்ஜூன் ரகுவரன எடுப்பாரே ஒரு பேட்டி அத ரியல பார்க்கிற மாதிரி இருந்தது. கடைசியில அந்தம்மா, மைக்க பிச்சி எறிஞ்சிட்டு.. மைக்க எடுக்க வந்த ஒரு ஆளையும் பிடிச்சு தள்ளிப்போட்டு, லட்சுமிக்கு அர்ச்சனை நடத்திக்கொண்டு, அந்தப்பற்றற்ற சித்தர்.. தனது விலை கூடிய காரில் ஏறிச்சென்றார்.

ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு.. முடிஞ்சா நீங்களும் பாருங்கோ... 

2 comments:

ராஜவம்சம் said...

http://www.dishtamilhq.com/play.php?id=10760

பார்த்து மகிழுங்கள்

Admin said...

நன்றிகள் ராஜவம்சம்