காலையில் அலாரம் அலறும் போது ஆரம்பிக்கும் வெறுப்பினை, எனது மனேஜரின் மீதான வசை பாடலுடன் ஆரம்பித்துவிடுவேன் ஏதோ பள்ளி எழுச்சி போல..
அவர் ஒன்றும் அப்படி மோசமில்லை என்பது போல்த்தான் தோன்றும்.. ஆள் எமகாதகன்.. கொடுத்த வேலையினை சரியாக முடிக்கும் வரை விடமாட்டார் அதன் தீவிரம் கோப்புக்களின் வரிசைக்கிரமம் வரை தொடரும். அதனால் அதிகம் அழுவது (வடிவேலுவைப்போல்….. அவ்…… முடியல..) நானாகத்தான் இருக்கும்.
அன்று வியாழக்கிழமை என்பதால் எல்லோரும் சுறுசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை நாளை வெள்ளி அல்லவா…….. அதுதான்… அவசர அவசரமாக வேலைகளினை முடித்து விட்டு மதியத்துடன் ஓடிவிடும் பரபரப்பு எல்லோர் முகத்திலும் ஒவ்வொரு வியாழனும் காணப்படும். ஆனால் அதிலும் ஒரு பரிதாபம் என்னவென்றால் – நிதிப்பிரிவு மட்டும் இதற்கு விதிவிலக்கு ( மீண்டும் ஒரு …….. அவ்…………….)
“எல்லாம் அந்த நாசமத்துப்போவான் படுத்திற பாடு”
வேற என்ன செய்ய? சத்தம் வரமால் திட்ட வேண்டியதுதான்.
இந்த வியாழன் படம் பார்க்க திட்டம் எல்லாம் தீட்டி டிக்கட் ரிசர்வ் செய்துவிட்டு நண்பர்களினை தயாராக இருக்க சொல்லிவிட்டு வேறு வந்துள்ளேன். இப்போது எப்படி நழுவுவது.. என்ன சொல்லிவிட்டு நழுவலாம்? என்று பலவகையில் யோசித்தாலும் ஒன்றும் தட்டுப்படவில்லை.( பல ஐடியாக்கள் இருந்தாலும், எல்லாம் ஏற்கனவே பயன்படுத்தியாச்சே……… மீண்டும் ஒரு அவ்…………………..)
நீண்ட யோசனையினை தொலைபேசி மணி கலைத்தது. அவர்தான்.
அவரது கேபினுக்கு அழைக்கிறார். சரி முடிந்தது இன்றைக்கும் 7 மணிதான் என எண்ணிகொண்டே உள்ளே நுழைந்தேன்.
மனிசன் வேலையில் மூழ்கி இருந்தார். நான் வந்ததையும் கவனிக்கவில்லை.
“எஸ் மிஸ்டர் அலா..” என்ற என் குரல் கேட்டே நிமிர்ந்தார்.
“ஓ சொறி..” என்றவாறு என் பக்கம் திரும்பினார்.
“இப்போது எதுவும் முடிக்க வேண்டிய வேலைகள் உமக்கு உண்டா?” என்ற அவரது கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மையமாக தலையசைத்தேன்.
“சரி இன்று எனக்கு இரு பங்க்சனுக்கான அழைப்பு வந்துள்ளது. இரண்டிலும் கலந்து கொள்ள எனக்கு நேரமில்லை.. எனவே, ஒன்றில் என் சார்பாக நீங்கள் கலந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே ஏற்பாட்டாளர்களிடம் அறிவித்துவிட்டேன். இதில் உமக்கு ஏதும் தடங்கல் உண்டா?”
எல்லாத்தையும் முடிவு செஞ்சு போட்டு எனக்கு தடங்கல் உண்டா எனக்கேட்டால் நான் என்ன செய்வது??
“ இல்லை மிஸ்டர்……”
“சரி மகிழ்ச்சி.. இதோ அழைப்பிதழ், நீங்கள் விரும்பினால், இன்று நேரத்துடன் வீடு செல்லலாம்”
அடப்பாவி…. விரும்பினாலா?????? அதுமட்டும்தாண்டா விருப்பம்…
இன்றைக்கு அந்த மனுசண்ட வேலை என்பதால் நேரத்துடன் செல்ல அனுமதி……….
ம்ம்ம்…..
படம் பார்க்க தயாராக இருந்த நண்பர்களின் முகம் இடையில் வந்து வயிற்றில் புளியயை கரைத்தது. ப்ரோகிராம் மாற்றம் எண்டா கூடி நிண்டு கும்மி அடிப்பானுகளே.. என்ற கவலை.
முன்பே ஒரு ப்ரோகிராம் அரேஞ்ச் பண்ணினா அதனை சொதப்பி வேறு ஒன்றாக்குவதில் நான்தான் முதலிடம் என்ற நல்ல???? பெயர் வேறு எனக்கு. இதுல இன்னும் ஒரு மகுடம்?? வேறு என்ன செய்வது…… என்ற யோசனையுடன் கையில் இருந்த அழைப்பிதழினை ஏதேச்சையாக பார்த்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி……
அட துபாயில் ஒரு பெரிய ஹோட்டலில் நிகழ்ச்சி என்றும் அதில் ஒரு அழைப்பிதழுடன் இரு நபர்கள் அனுமதி என்றும் போட்டிருந்தது..
அப்பாடா… இவனுகளிடம் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு…
படம் எப்பவும் பாத்துக்கலாம் இது ஒரு நாளும் கிடைக்காது.. அந்த ஹோட்டலுக்குள்ள போற சான்ஸ் போகலாம் அது இது என் பில்டப் கொடுத்து ஆக்கள அமைதிப்படுத்தி கூட்டிக்கி போக வேண்டியதுதான். என்ற திட்டம் மனதில் ஒரு உற்சாகத்தினை கொடுக்க வேகமாய் வீடு நோக்கி செல்லலானேன்.

அறைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே நண்பர்களின் சத்தமும் சிரிப்பொலியும் நாளைய விடுமுறையினை உறுதிப்படுத்தியது. அந்த ஒரு நாளுக்காகத்தானே மீதி நாட்கள் வாழ்வதே…
என்னைக் கண்டதும் .. எல்லோரும் வினோதமாக விளித்தனர்… புரிந்துவிட்டது..
“இன்னைக்கு என்னடா நேரத்தோட?????????? ஓபிசில் பவர் கட்டா??” என்று சத்தமாக ஒருவன் சிரிக்கவும் மற்றவர்களும் இணைந்து கொண்டனர். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்றது…
“ சரி … என்ன ப்றோகிறாம்?” என்று சொல்லி வாயினை மூடு முன் எங்கிருந்தோ ஒரு புத்தகம் தலையினை சீவிக்கொண்டு சென்றது.
“ … தணிக்கை வசனங்கள்……… படம் பார்க்க எல்லாம் ரெடி பண்ணிட்டு இப்ப என்ன ப்றோகிறாமா? … தணிக்கை வசனங்கள்……… “ என்றவாறு கொலை வெறியுடன் நிற்கும் அவனை பார்த்ததும் பீதி மீண்டும் பீடித்துக்கொண்டது…
சற்று சுதாரித்துக்கொண்டே ….. எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணத்துடன்.. எனது அகிம்சாவாதி நண்பனை நோக்கி திரும்ம்பினேன்.. ( மற்றவனுங்க அடிச்சே காலி பண்ணிடுவானுகள்…….. அவ்…. )
“அதில்லடா றிசாட்………. படம் எப்பவும் பார்த்துக்கலாம்……….”
என்று இழுத்தவுடன் புரிந்துவிட்டது அவர்களுக்கு………. வண்டி வண்டியாக வசவுகள் குவியத்தொடங்கி விட்டன……..
காப்பாற்றுடா……. என கண்களால் அவனை கெஞ்ச தொடங்கி விட்டேன்………
எப்படியோ ஆசுவாசப்படுத்தி விசயத்தை சொன்னவுடன்……. போட்ட பிளான்
நிறைவெறவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் அந்த ஆடம்பர ஹோட்டலுக்கு செல்லப்போகின்றோம் என்ற ஆர்வம் அவர்களின் முகங்களில் மின்னியது.
“டேய் உண்மையா அங்கதானா?????” என்றான். என்னை சற்று முன்பு வரை , என்கு குத்தினால் எனக்கு வலிக்கும் என யோசித்துக்கொண்டிருந்த என் நண்பன். ஆஹா சிக்கிச்சிடா சிறுத்த என மனசுக்குள்ள சத்தமாக சிரித்துக்கொண்டே,,
“ஓம்டா அதான்….” என்றேன்.. திருப்தியாக தலையாட்டிக்கொண்டான்.
இப்போது எங்கள் மூவருக்கும் படம் பார்க்கும் பிளான் இருந்தாக ஞாபகமே இல்லை. அந்த ஹோட்டலுக்கு செல்லும் ஆர்வமே மேலோங்கிக்காணப்பட்டது..
விருந்துக்கு செல்வதற்கான ஆயத்தப்பணிகள் மும்மூரமாக தொடங்கப்பட்டன.
அத என்னத்த சொல்றது…………… எப்படியோ 8 மணிக்கெல்லாம் தயாரகிவிட்டோம்.
இப்போது அடுத்த பிரச்சினை தொடங்கியது
அடுத்த நாள் விடுமுறை என்பதால், வீதிகள் வாகன நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது. 9 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் எப்படியாவது போய்ச்செரவேண்டும் இருக்கும் நேரத்திற்குப்புறப்பட்டால்தான் சரியான நேரத்திற்கு போய்ச்சேரலாம்.
ஒரு டாக்சியும் நிற்பது போல் தெரியவில்லை. வீதியில் அரைமணிநேரம் செலவாகிவிட்டது.
எப்படியாவது போய்ச்செரவேண்டும் என்ற பதைபதைப்பு மூவரையும் பீடித்துக்கொண்டது.

திடிரென ஹிஸ்டீரியா வந்தது போல தலையாட்டி ஒரு லுக் விட்டான். சமீர். “ இன்னைக்கு நடந்தாவது போற வா போவம்” என்றவாறு எங்கள் பதிலினை எதிர்பார்க்காமல் நடக்கத்தொடங்கினான். அவ்ன் கொஞ்சம் உடல் வாகானவன் அதனால் வேகமாக நடக்கத்தொடங்கி விட்டான். ஆனால் எனக்கோ, றிசாட்டுக்கோ கொஞ்சம் உடம்பு ( ??? ) அதனால், அவனது நடைக்கு ஈடு கொடுக்க நாங்கள் ஓட வேண்டியதாயிற்று.
ஒருவாறாக , நாக்குத்தள்ள தள்ள ஹோட்டலினை அடைந்தோம். மணி 9.30. இதற்குள் நிகழ்ழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து பல தடவைகள் அழைப்புகள். நிகழ்வு மற்றும் உபசரிப்புப் பற்றி பல எதிர்பார்ப்புகளினை கூட்டிவிட்டது.
ஒரு பிரமிப்புடன் உள்ளே நுழைந்தோம்.. ( ஊரில் சொல்லுவாங்க……… பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிறது போல.)
அழைப்பிதழினை காண்பித்ததும் கிடைத்த வரவேற்பு ஒரு கணம்,, மகாராஜாக்கள் போல உணர வைத்தது.
ஒரு பிரமாண்டமான ஹோலினுள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஒரு ஓரத்தில் அமர்த்தப்பட்டோம்.. இன்னும் பட்டிக்காடான் மிட்டாய் கடை முடியவில்லை…
“ ஹல்லோ வெல்கம்’’… என்ற கம்பீர வார்த்தைகள் எங்களை உலகுக்கு கொண்டு வந்தது..
சிரித்த முகத்துடன் ஒரு அரபி… அனேகமாக லெபனாக இருக்க வேண்டும்..
கையிலிருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்துவிட்டு..
“ வாருங்கள்.. இன்று நீங்கள் எங்களின் விருந்தாளிகள்..” என்றார் புன்முறுவலுடன்..
எனக்கு பெருமை பிடிபடவில்லை.. நண்பர்களினை பெருமையுடன் நோக்கினேன்…. ( பின்னுக்கு இருக்கும் ஆப்பு தெரியாமல்..)
அவர் முன்னே செல்ல அவரினை பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தோம்.. மெல்லிய இசையில் அவ்விடம் மூழ்கிக்கொண்டிருந்தது… அறை முழுவதும் 5 பேர் அமரக்கூடிய வாறு மேசைகள் ஒழுங்குப்டுத்தப்பட்டிருந்தன.. அவற்றீல் அதிகமானவை நிரம்பி இருந்தன.
எங்களினை கூட்டிச்சென்ற நபர்.. காலியாக இருந்த மேசையினை நோக்கி சென்றார்…
“ஆஹா சாப்பாடு ரெடிடா மச்சான் அப்படியே அடிச்சிட்டு மாறுவம் எடத்தப்புடி” என்று காதில் கிசுகிசுத்தவாறே உட்கார்ந்து கொண்டான் றிஸாட்..
சம்பிராதாய குசல விசாரிப்புகள்,, என ஒரு பதினைந்து நிமிடங்கள் கரைந்தன.. அதற்குள் 20 முறை புffஎற் கவ்ண்டர காணல்லயே!!! என்ற சந்தேகத்தினை முதலில் வந்து இடம்பிடித்த நண்பன் கேட்டுக்கொண்டே இருந்தான்..
அப்பாடா…. ட்ரிங்க்ஸ் வந்துவிட்டது.. மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது… மூன்றே மிடரில் காலி செய்துவிட்டு காலி கோப்பயினை பார்த்துக்கொண்டோம்.. ஆனாலும் இதை எதுவும் கவனியாது ஏதோ பைலினை நோண்டிக்கொண்டிருந்தார் வந்தவர்.
தொண்டையினை செருமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தார்… இப்போது அவரது ஆரம்பம் ஒரு செயற்கை தனத்துடன் தொடங்கியதாக எனக்கு அப்போது பட்டது..
“நண்பர்களே, இந்த ஒன்று கூடலின் நோக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார்..
‘அந்த இழவெல்லாம் எமக்கென்னத்துக்கு…. ஓசியில கெடச்சத எஞ்சாய் பண்ணா வந்தா ரொம்ப அறுப்பான் போலிருக்கே…” என்று எண்ணிக்கொண்டேன்..
என் நண்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்???????? திரும்பிப்பார்த்தால்…. எக்ஸாம் ஹோலில் முதல் 10 நிமிஸம் எப்பிடி இருப்பானுகளோ அப்படியே என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்..
அவருக்கு புரிந்துவிட்டது..
“நண்பர்களே, இது ஒரு சர்வதேச முகவர் நிலையம், நாங்கள் புதிதாக இங்கு எங்களது கிளையினை திறக்கும் முகமாக, இந்நிகழ்வினை நடத்துகின்றோம், இது முடிந்ததும் உங்களுக்கு ஒரு பரிசும் காத்திருக்கின்றது.” என்றதும் எங்களது முகங்கள் பிரகாசிக்கத்தொடங்கின…
பரிசு…..!!!!!!!!!!!
பின்பு தொடங்கியது அந்நபரின் சொற்பொழிவு (அத வேற எப்படி சொல்றது என்று
எனக்கு தெரியவில்லை) அவர்களின் நிறுவனம் நிறுவனத்தின் விபரங்கள்.. என இன்னும் பல விடயங்கள் ஒரு 40 நிமிடங்களினை விழுங்கியது… எனது நண்பர்களுக்கு சூடு ஏறிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
பக்கத்திலிருந்து கொண்டு அடிக்கடி எனது காலினை எவ்வளவு முடியுமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழுத்த்த்த்த்த்த்த்த்திக்கொண்டிருந்தான்.. அவ்……………..
மேட்டருக்கு வாயெண்டா என்று கெஞ்சாத குறையாக கண்களால் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
“சரி விடயத்திர்கு வருகின்றேன்”
அப்பாடா!!!!! முடிச்சிருவான்.. இனி சாப்பிட இன்வைற் பண்ணுவானுகள்..
அதான் இல்லை..
“நண்பர்களே, இங்கு நாங்கள் எங்களது நிறுவனப்பணிகளினை ஆரம்ப்பிப்பதால் நாங்கள் ஒரு பிரயாணப்பொதியினை மலிவான விலைக்கழிவுடன் வழங்குகின்றோம், நீங்கள் அதனை பெற விரும்புகின்றீர்களா? அல்லது அதனைப்பற்றி அறிய விரும்ம்புகின்றீர்களா?”
என்றபோதுதான் விளங்கியது.. எதுக்கு இவ்வளவு நேரமும் இத்தன ததிங்கிணத்தோம் என்று…..
எனது மறு பக்கத்தில் உஸ்ணம் தாங்க முடியவில்லை..
ஏண்டா இப்படி என்ன சோதிக்கிற கடவுளே……… அவ்வ்………
“ மன்னிக்க வேண்டும்,, நாங்கள் அதற்கு தயாரக வரவில்லை,, அது பற்றி எமக்கு அறிவிக்கப்படவில்லை.. வெகு சீக்கிரத்தில் அது தொடர்பாக நாங்கள் உங்களினை தொடர்பு கொள்கின்றோம்” என்றேன்… அவசரமாக் முடித்துக்கொள்ளும் நோக்கில்…
அந்நபர் புன்னகையுடன் தோள்களினை தூக்கிவிட்டுக்கொண்டார்.. அப்பாடா முடிச்சிட்டாண்டா…
இதற்குள் ஒரு மணித்தியாலம் கரைந்து போய்விட்டது.
பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்துவிட்டது… எப்படா? டின்னருக்கு கூப்பிடுவான் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது தெளிவாக முகங்களில் தெரிந்தது,,
அவர் எழுந்து கொண்டார்,
சிரித்த முகத்துடன், “ உங்களது இனிய மாலைப்பொழுதினை எங்கழுடன் பகிர்ந்தமைக்காக மிக்க நன்றிகள். எங்களது நிறுவனம் உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய காத்திருக்கின்றது. மீண்டும் உங்களினை சந்திக்க நாம் ஆவலாக உள்ளோம். நன்றிகள்….”
அடப்பாவிகளா!!!!!!!!!!! முடிச்சிட்டான்யா!!!!!!!!!!!
போகச்சொல்றான் என்பது என்னைவிட என்நண்பர்களுக்கு கொஞ்சம் தாமதமாகப்புரிந்து என்னை நோக்கி திரும்பும் போது,, நான் வாசலை நோக்கி ஓடமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்…. என் மனேஜரினை திட்டிக்கொண்டே…
அன்றிரவு மட்டும் எனக்கு விடியவில்லை.. வீட்டிற்கு வந்ததும் எனக்கு மட்டும்
தனிக்கச்சேரி நடந்தது தனிக்கதை…. அவ் ………….. முடியல…

2 comments:
நல்லா எழுதியிருக்கிங்க..
தனிக்கச்சேரி நடந்தது தனிக்கதை…. அவ் ………….. முடியல…//
அனுபவம் அருமை. சுவாரஸ்யம் கலந்து பதிவாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா! நல்ல வேளை தலை தப்பினால் காணும் என்று ஓடி வந்திட்டீங்கள். இல்லை என்றால் பிரயாணச் சீட்டை உங்களிற்கே விற்ற்குப் பணம் சுருட்டியிருப்பார்கள்.
Post a Comment