தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி!

தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி! 
தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். 

ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன்.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார்.

ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று சாரா கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த நிருபர் முதல் கட்டமாக ரூ.28 லட்சத்தை சாராவிடம் கொடுத்தார். அதை அவர் வீடியோவாக படம் எடுத்தபோதுதான் தன்னிடம் பணம் கொடுத்தவர் நிருபர் என்று சாராவுக்கு தெரிந்தது.

உடனே சாரா அந்த பணத்தைத் திருப்பி கொடுத்ததுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
( நன்றி
வீரகேசரி )

அதாகப்பட்டது மக்களே இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்னவென்றால்

அவர சந்திக்கவே 3 கோடி என்றால் .. அதுக்கு அப்புறம்..

நிருபருக்கு எப்பிடி மூக்கு வேர்த்திருக்கும்? முந்தியும் இப்பிடி நடந்திருக்க வேண்டும் அதான் அவர் நடித்திருக்கார்.

முன்னாள் மனைவியா இருந்துக்கே தைரியமா 3கோடி கேக்குதே இந்த லேடி.. அப்ப முந்தி எத்தின கோடிய பாத்திருக்கும் ???

லஞ்சம், இலங்கை இந்தியா என்பவற்றிற்கு பிரிட்டிஷாரினால்த்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.