"நான்" பற்றி........


"நான்" பற்றி........

உதிரங்களாய் போன
என் கனவுகள் பற்றி,
சோம்பல் முறித்து;
கண்ணடித்து சிரிக்கின்ற
என் காதல் பற்றி,
கோரைப் பல் முளைத்து
இரத்தம் வழிய,
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
அரக்கு மிருகம் பற்றி,
இன்னும்....
என்னுள் எவை எல்லாமோ
அவை பற்றி
பாடிய என் பாடல்கள்
"நான்" பற்றி பாட வாய் திறந்தன

ஆனாலும்,
விடை இன்றி ஓர் வினா
அடிக்கடி
என் பாடல் நோக்கி...
"நான்" யார்?
விடைகள் ஏதுமில்லை.
முகமூடிகள் இன்றி இயங்க முடியா
என்னுள் நான் யார்?
"நான்" ஒன்றின்றிப் போக..
எங்கே எனது "நான்"?
இன்னும் தேடலுடன்..............

எனகுள்
ஒற்றையாய் தனித்த ஓர் பறவை,
காதலன்,
எதையோ தேடும் பரதேசி,
கனவின் மனிதன் என,
இன்னும் ஏதேதோ குடியிருக்க,
நான் எங்கே??

உடல் கிழித்து
என் பாடல்கள்
நான் பற்றி பாட வாய் திறக்கின்றன
இடையில்.....
தனித்த ஓர் பறவை குறுக்கிட்டது
என் பாடல்கள்
பறவையை பின் தொடரலானது.

இன்னும் என் பாடல்கள்
"நான்" பற்றி பாடவே இல்லை.
__________________

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!