மனசும் மண்ணாங்கட்டியும்
மனசும் மண்ணாங்கட்டியும்

உறவுகள் யாவும் செத்தே போயின,
துரோகம் கூறும் நட்புகளும்,
குற்றம் சொல்லும் காதலுமாய்.

யாரில் உன்னை திணிக்கப் போகிறாய்?
வேலையற்று,காத்திருந்து,கவலைப்பட்டு........
சே!
முட்டாளாகிப்போன நீ பற்றி
நான் இனிப் பாடப் போவதில்லை.

என் பேனா முனையில்
உலகம் சிருஸ்டித்த நீ பற்றி-இனி
நான் பாடப்போவதே இல்லை.

இழிந்த உன் உணர்வுகள் பற்றி
என்க்கேதும் அக்கறையில்லை.
ஏதுமற்றே போய்விட்டாய்.
எதற்குனக்கு உணர்வுகளின் மீதான அக்கறை?
விட்டுத்தொலை!
எல்லோரும் சாகடித்த ஒன்று பற்றி,
நீ வருந்துவதில் ஏதுமாகா!
மனசும் மண்ணாங்கட்டியும்.
__________________

Comments

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.