என் லட்சியங்கள்
என் லட்சியங்கள்

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
என்று முடியும் என்பதில்
எப்போதும்,
வெறுமையே விடையாகிப்போனது.

ஓர் பார்வையில் இளைப்பாறி,
காதலில் அமிழ்ந்து......
இன்னும்..
என் லட்சியங்கள்
தொடமுடியா இலக்கின் தடங்கல்களுக்குள்.

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

கருமை பூசிய காலங்களின் ராட்சதபசி
என் லட்சியங்களை உண்ணுமா?

இன்னும் செறிவற்று,
நான் ஏதுமின்றி,
திறந்தே கிடக்கின்றேன்.
விடைகள் ஏதும் மேலிருந்து விழவில்லை.
இன்னும் இன்னும் லட்சியங்களாக....

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
__________________

Comments

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

கடிதங்களினையும் காக்கைகளினையும் தின்ற தொலைபேசிகள்