Parody films அல்லது Spoof எனப்படும் திரைப்பட வகை ஒன்று ஹாலிவூட்டில் உண்டு. இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கான தமிழ்ப்படுத்தல் எப்படி இருக்கும் என்று நான் அறிய மாட்டேன். தெரிந்தவர்கள் கூறலாம்.
இது வேறொன்றுமில்லை. மிக அண்மையில் தமிழ் சினிமாவின் போலித்தனங்கள் , ஹீரோயிசம் என்பவற்றினை கேலி செய்து வெளிவந்த – “தமிழ்ப்பட”த்தின் வகையே இது. ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் மிக மிக அரிது அல்லது புதிது. இவ்வகையான திரைப்படங்களினை தமிழில் எடுப்பதற்கான ஜனநாயக சூழல் தமிழ் சினிமாவில் உள்ளதா என்ற சந்தேகத்தின் காரணமாக இவ்வகை திரைப்படங்கள் வராமல் விட்டிருக்கலாம் ( விரும்பும் அனைவரும் ஆட்சியாளர்களின் உறவினராக இருக்க வேண்டுமோ??)
ஆனால், ஹாலிவூட்டில் இவ்வகை திரைப்படங்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் பிரபலமான திரைப்படங்களினை அப்படியே மாற்றி கேலியும் கிண்டலுமாக எடுத்துவிடுவர். இவ்வகைத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பும் மக்களிடையே காணக்கிடைக்கின்றது. அது மட்டுமன்றி , கேலிக்குள்ளாகும் மூலத்திரைப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே இவ்வகைத்திரைப்படங்களினை வரவேற்கும் நிகழ்வுகளும் அங்கு நடைபெறுகின்றதாம் என்ற தகவல் இன்னும் நம்மை திகைக்க வைக்கின்றது.
தமிழில் முற்றுமுழுதாக பிற சினிமாக்களினை கேலி பண்ணி வந்த இரண்டாவது திரைப்படம் தமிழ்ப்படம் என அறியக்கிடைக்கின்றாது ( முதல் படம் எஸ்.வீ, சேகரின் திரைப்படம். பெயர் நினைவில்லை ) ஆனாலும் இது முற்று முழுதாக Parody வகைத்திரைப்படம் என சொல்ல முடியாது. ஏனெனில். இவகைத்திரைப்படங்கள் முற்று முழுதாக ஒரு திரைப்படத்தினை மாற்றி மூலக்கதை சிதையாமல் கேலியுடனும் நடைமுறை விடயங்களினை கிண்டல் செய்தும் எடுக்கப்படுகின்றன. தமிழ்ப்படம் இப்படி இல்லை, அது சினிமாத்தனங்களினை கிண்டல் செய்யும் ஒரு தொகுப்பு போல காணப்பட்டது. எனினும் இவ்வாறன திரப்படங்கள் தமிழில் வருவதற்கான பிள்ளையார் சுழியாக தமிழ்ப்படம் அமையுமா? எனபதற்கு இனிவருகின்ற நாட்கள் பதில் சொல்லும்,
ஹாலிவுட்டில் இவ்வகைத் திரைப்படங்கள் 40 களில் இருந்தே வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றுவரை அதற்கென ஒரு ரசிகர் கூட்டமும், அவ்வாறான திரைப்படங்களினை எடுப்பதற்கென படைப்பாளிகளும் இருக்கின்றனர். இதற்கு காரணம் என நான் கருதுவது – அவர்கள் அதனை ஒரு திரப்படமாக மட்டும் பார்த்து ரசித்துவிட்டுச்செல்வதுதான். ஆனால் எமது சினிமாச்சூழல் வேறு. இங்கு ரசிகர்கள் சினிமா நாயகர்களை கடவுளாக கொண்டாடுகின்றனர். அக்கடவுளர்களின் திரைப்படங்கள் கேலியாக்கபடும் போது அதை ஜீரணிக்கும் மனநிலை எமது ரசிக மகா ஜங்களுக்கு இருக்குமா என்பது பாரிய கேள்விக்குறி. அதோடு, கெமரா முன் நின்றவுடன் முதல்வர் கனவுகளுடன் வளைய வரும் நம் நடிகர்கள் ( ???? ) இதனை அங்கீகரிப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இவ்வகையான திரைப்படங்களுக்கு தமிழில் எதிர்காலம் என்பது ????????
நான் பார்த்து ரசித்த சில Parody கள் :
- Meet the Spartans ( இது 300 என்ற ஹாலிவூட் திரைப்படத்தின் Spoof)
- Super hero ( Spider Man திரைப்படங்களினை கேலி செய்து..)
இன்னும் தெரிந்து கொள்ள கூகுளினை நாடுங்கள்.
No comments:
Post a Comment