4 வருடங்களில் 50 வது பதிவு


ச்சரியமாகத்தான் உள்ளது. நான் இவ்வலைப்பூவினை ஆரம்பித்து 4 வருடங்கள் இம்மாதத்துடன் முடிகின்றன

ஆனால் இப்போதுதான் எனது 50 வது பதிவினை நான் இடுகின்றேன். வலைப்பூக்கள் தொடர்பான நீண்டகால பரிட்சயம் இருந்த போதும் எழுதுவதற்கான சூழல் இப்போது கிடைத்திருப்பதை போல முன்பு அமையவில்லை.

எனது முதலாவது பதிவே 2009ல் தான் இடப்பட்டுள்ளது. இது பல அக , புற சூழல்களால் ஏற்பட்ட ஒன்று. எனினும் இப்போது கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள் முடிகின்றது என்பதால் இனி என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஆனாலும், பதிவுகளினை இடுகின்ற வேளைகளில் , இது வாசிப்போருக்கு பிடிக்குமா? எனது ஆக்கங்கள் எழுத்துக்கள் பற்றி ஏதாவது விமர்சனங்கள் வராதா என்ற அவா எப்போதும் எட்டிப்பார்க்கும். ஆனாலும் அதில் அவ்வளவாக நான் வெற்றி பெறவில்லை என்றே கருதுகின்றேன். ஏனெனில், இதுவரை எனக்கென கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 3 மட்டுமே இது சிறிது ஏமாற்றத்தை தந்தாலும், எழுதுவதை விடும் எண்ணம் இன்னும் இல்லை.  

முடிந்தவரை சொல்லிக்கொண்டே இருப்பேன்.
-    நன்றிகள்

Comments

ILA(@)இளா said…
இதோ நாலாவது.. வாழ்த்துக்கள்!
தோழி said…
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்க...
sarhoon said…
இளா மற்றும் தோழி ஆகியோருக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்...

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.