ஆச்சரியமாகத்தான் உள்ளது. நான் இவ்வலைப்பூவினை ஆரம்பித்து 4 வருடங்கள் இம்மாதத்துடன் முடிகின்றன.
ஆனால் இப்போதுதான் எனது 50 வது பதிவினை நான் இடுகின்றேன். வலைப்பூக்கள் தொடர்பான நீண்டகால பரிட்சயம் இருந்த போதும் எழுதுவதற்கான சூழல் இப்போது கிடைத்திருப்பதை போல முன்பு அமையவில்லை.
எனது முதலாவது பதிவே – 2009ல் தான் இடப்பட்டுள்ளது. இது – பல அக , புற சூழல்களால் ஏற்பட்ட ஒன்று. எனினும் இப்போது கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள் முடிகின்றது என்பதால் இனி என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஆனாலும், பதிவுகளினை இடுகின்ற வேளைகளில் , இது வாசிப்போருக்கு பிடிக்குமா? எனது ஆக்கங்கள் எழுத்துக்கள் பற்றி ஏதாவது விமர்சனங்கள் வராதா என்ற அவா எப்போதும் எட்டிப்பார்க்கும். ஆனாலும் அதில் அவ்வளவாக நான் வெற்றி பெறவில்லை என்றே கருதுகின்றேன். ஏனெனில், இதுவரை எனக்கென கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 3 மட்டுமே… இது சிறிது ஏமாற்றத்தை தந்தாலும், எழுதுவதை விடும் எண்ணம் இன்னும் இல்லை.
முடிந்தவரை சொல்லிக்கொண்டே இருப்பேன்.
- நன்றிகள் -
4 comments:
இதோ நாலாவது.. வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்க...
இளா மற்றும் தோழி ஆகியோருக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்...
வாழ்த்துக்கள் ...
Post a Comment