விதி ஒன்றும் வேண்டாமென்று…. இனி ஒரு விதி செய்வோம்…


இனியொரு விதி செய்யச் சொன்னான் பாரதி.
நாம்
இனியொரு விதி என பல விதி செய்தோம்.
வழி சமைக்க விதி செய்தோம்..
விதி சமைக்க வழி செய்தோம்..
சதி முறிக்க விதி செய்தோம்.
சரித்திரம் படைக்க விதி செய்தோம்

இன்னும்,
பகை அகற்ற விதி செய்தோம்,
பகை முறிக்க விதி செய்தோம்,
விதி செய்ய விதி செய்தோம்
மதி வெல்ல விதி செய்தோம்

செய்தோம் செய்தோம்………..
விதி செய்வதே விதியாகி-
வேறொன்றும் மிஞ்சாது சூனியம் மிஞ்ச,
இனி ஒரு விதி செய்வோம்
விதி ஒன்றும் வேண்டாமென்று.


Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!