ஒளிந்துகொள்ளும் வார்த்தைகள்


பேனா எடுத்ததும்,
இன்று பார்த்த அக்குழந்தைகள் பற்றி,
காலையில் எழும் போது கேட்ட அப்பாடல் பற்றி,
இன்னும்,
நேற்றிரவின் கனவு சொல்ல,
இறந்து போன ஒரு காதல் பற்றி
என யாவும் சொல்ல ஆசைதான்.
ஆனாலும்
சொல்லத்தொடங்குமுன் வார்த்தைகள் ஒளிந்துவிடுகின்றன.

மீண்டு வர காத்திருந்து காலம் கரைய
எழுதுகோல் உறங்கச்செல்லும் தருணங்களில்,
மெல்ல எட்டிப்பார்க்கும் ஒன்று.
சற்றைக்கெல்லாம்,
மீண்டும் சகஜமாகி விளையாடத்தொடங்கும்.
என் எழுதுகோல் மீண்டும் விழிக்கும்வரை..
Comments

நிதர்சனம்,வாழ்த்துகள்!!

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.