இங்கிலாந்து : இறுதியில் கனவு பலித்தது.
அது என்னவோ தெரியவில்லை, 20க்கு 20 போட்டிகள் அவுஸ்திரேலியா அணிக்கு அவ்வளவாக ராசியில்லாத ஒன்றாகவே உள்ளது. இது அவர்களின் மூன்றாவது தொடர் உலகக்கிண்ண தோல்வி என்ற போதும் இவ்வுலகக்கிண்ணம் அவர்களின் முன்னேற்றத்தினை காட்டி நிற்கின்றது ஏனெனில் 2009 உலகக்கிண்ண 20க்கு 20 ல் அவர்கள் அரை இறுதிக்குக் கூட தகுதி பெறவில்லை. எனவே இது அவர்களுக்கு ஏறுமுகம்தான். ஒருவேளை இம்முறை கொஞ்சம் அடக்கி வாசித்ததால் சறுக்கிவிட்டார்களோ என்னவோ?? இல்லை என்றால் , மைதானங்க்களுக்கு வெளியில் எதிரணியினர் மீதான உளவியல் தாக்கங்களினை ஏற்படுத்துவதில் அவுஸ்திரேலியர்கள் வல்லவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. ஆனால் அது இம்முறை நடக்கவில்லை. எந்த ஒரு  ஒண்டிக்கு ஒண்டி வாறியா அறிக்கைகளினையும் அவுஸ்திரேலியா தரப்பிலிருந்து வந்ததாக காணவில்லை.

அவுஸ்திரேலியர்கள் இறுதிப்போட்டியில் பெற்ற 147 ஓட்ட இலக்கு என்பது மற்ற அணிகளினை பொறுத்தவரையில் போதுமானதாக இருந்திருக்காது. இவ்வாறான நேரங்களில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் ஒரு சம பலம் பொருந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என அடித்து சொல்லலாம். ஆனால் அவுஸ்திரேலியர்களினை பொறுத்தவரையில் அவர்களினை மதிப்பிடுவது எம்மை போன்ற கடைநிலை ரசிகர்களினை சிரமத்திற்கு உள்ளாக்கும் விடயம். அவர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்காத வேளைகளில் களத்தடுப்பில் , பந்துவீச்சில் விஸ்ரூபமெடுத்து எதிரணியினரை துவம்சம் செய்துவிடுவர். இதற்கு பல ஒரு நாள் போட்டிகளும் இவ்வுலகக்கிண்ண துவக்கப்போட்டிகளும் சான்று. அதனால் 147 என்ற இலக்கு போதுமா இல்லையா என்பது பற்றிய விமர்சனங்கள் குறைவாகவே இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்.

அவுஸ்திரேலியர்களின் வெற்றியானது இங்கிலாந்துவீரர்களின் ஆக்ரோசத்திற்கும், எப்படியாவது உலகக்கிண்ணத்தினை வெற்றி கொள்ள வேண்டும் என்ற துடிப்பிலும் அது அடிபட்டுப்போய்விட்டது. ஏனென்று தெரியவில்லை, அவர்களின் களத்தடுப்புக்கூட மிக சாதாரணமாக இருந்தது.
மறுபக்கம் இங்கிலாந்தில் 35 வருட கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது- இவ்வுலகக்கிண்ணம் மூலம்Craig Kieswetter மற்றும் Michael Lumb , Kevin Peter Pietersen போன்றோரின் அபாரமான துடுப்பாட்ட திறமை இங்கிலாந்து அணியின் உலகக்கிண்ண கனவினை நனவாக்கியுள்ளது. இதில் குரிப்பிட வேண்டிய இன்னோரு அம்சம் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவிய அனைவரும் வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து அணிக்கு இறக்குமதி ( ???? )ஆனவர்களே. அதில் தென்னாபிரிக்கர்களின் பங்களிப்பே குரிப்பிடும்படிமைந்தது. மேற்குறிப்பிட்ட அனைத்து மட்டையாளர்களும் தென்னாபிரிக்கர்களே அதோடு அயர்லாந்திலிருந்து தற்போது இங்கிலாந்திற்காக விளையாடும் Eoin Morgan முக்கியமானவர்கள். சொந்த நாடு அல்லாத, கிரிக்கட் விளையாட்டுக்காகவே இங்கிலாந்தில் குடியேறிய இவ்வீரர்கள் மூலம் பெற்ற இவ்வெற்றி பற்றி சிறிய அசௌகரியங்கள் எங்காவது எழ வாய்ப்புள்ளது எனினும் அது அவர்களின் வெற்றிக்கொண்டாட்டங்களில் மறைந்துவிடலாம். எது எவ்வாறிருப்பினும் தற்போது இங்கிலாந்து 20 : 20 உலகக்கிண்ண வெற்றியாளர்கள். அவர்களின் நீண்ட கனவு இன்று நனவாகி உள்ளது.

இம்மாதம் பிரித்தானியர்களுக்கு மறக்கமுடியாத மாதமாகவும் நினைவுகூரக்கூடிய சரித்திர முக்கியம் மிக்க மாதமாகவும் திகழும் என சொல்லலாம். ஏனெனில் இம்மாதத்தில் இங்கிலாந்தில் உலகக்கிண்ண வெற்றியுடன் 36 ஆண்டுகளின் பின்னர் ஒரு தொங்கு பாராளுமன்ற ஆட்சியும் மலர்ந்துள்ளது.
இனி இங்கிலாந்து கிரிக்கட்டிலும் சரி, அரசியலிலும் சரி தனது இடத்தினை தக்க வைக்க இன்னும் இன்னும் உழைக்க வேண்டும். அது ஒன்ரும் இலகுவான காரியமல்ல என்றாலும், இப்போதுள்ள அணியின் உத்த்வேகமிக்க இளைஞ்சர்கள் அதனை தக்க வைக்க போராடுவர் என்பது நிதர்சனம்.

 அட! அவர்களின் பிரதமர் கூட 43 வயது இளைஞர் தானே ( அரசியலினைப்பொறுத்தவரையில் )!!!!!!!!!!!!!!!!!!! வாழ்த்துக்கள் அவர்களுக்கு

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!