வாழ்க தமிழ்மொழி and டமில் மக்கள்

சகோதரர்கள் இன்னும் துயரில் இருந்து மீளவில்லை. அகதி வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது. மேற்கிலிருந்து வடக்கிற்கு சுற்றுலாவுக்கு வரும் பெரும்பான்மை மக்களிற்கு இலகுபடுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் சொந்த மண்ணிற்கு செல்லமாட்டோமா என ஏங்கும் அம்மக்களிற்கு மறுக்கப்படுகின்றன. இன்னும் அரசியல்தலைவர்களின் சொந்த அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கமைவாக அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

மீள் குடியேற்றப்படும் மக்களும் தமது சொந்த இடங்களிலேயே எந்த ஒரு பொருளாதார ஆதாரங்களும் இன்றி அநாதரவாக்கப்பட்டுள்ளனர். அங்கும் அவர்களது அகதி வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது.

உரிமை , நிலம் அது இது என்று சூடேற்றி சூடேற்றி இறுதியில் விடுதலையின் பேரில் அவர்களிடம் அகதி வாழ்க்கை மட்டுமே மிஞ்சி நிற்க,  இன்று எது வேண்டும் என கேட்டால், சத்தியமாக அவர்கள் , தனி நிலம் எங்கள் உரிமை என சொல்ல தயாரில்லை. நிம்மதியான வாழ்வு , கூழோ கஞ்சியோ குடித்துவிட்டு பயம் இன்றி தூங்கும் ஓர் நிலை அவ்வளவே. ஆனால் அதை யார் அளிப்பர் என்பதே இப்போதுள்ள கேள்வி.

இதய சுத்தியுடன் அவர்கள் பற்றி சிந்திக்க இன்னும் யாராவது உள்ளனரா?

பாடசாலைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. வரும் குழந்தைகள் முகங்களில் இன்னும் யுத்தத்தின் வடுக்கள், அதிகமான குழந்தைகள் தந்தையினை அல்லது தாயினை இழந்தவர்களாக மிரட்சியுடன் நிற்கின்றன. 

அனைத்துக்கட்டுமானங்களும் சிதைந்து போன பிரதேசங்கள் இன்னும் மீள் புனருத்தானம் இன்றி இருக்க இன்னொரு பக்கம் வெகு விமரிசையாக யுத்த வெற்றிகள் கொண்டாடப்பட இருக்கின்றனஇதெல்லாம் தெரியும்தானே, இதெல்லாம் பழங்கதைகள்


இப்ப நம்ம கவலைகள் + பிரமிப்புக்கள் இப்படி :

ஆமா, சிங்கம் படம் எப்பப்பா ரிலீஸ்?

நயந்தாரா பிரபுதேவா மேட்டர் ரொம்ப சூடா போகுதே?

செம்மொழி மாநாட்டு பந்தலுக்கே தமிழக அரசு ஐந்தரை கோடி செலவு செய்யுதாமே ! மெய்யாலுமா?

தோனிக்கும் அசினுக்கும் ‘அதுவாமே” ?

வாழ்க தமிழ்மொழி  and டமில் மக்கள்Comments

LOSHAN said…
தேவையானதைப் பற்றி சிந்தித்துள்ளீர்கள்.. சொல்ல வேண்டியவை பற்றி சொல்லி உள்ளீர்கள்..
உங்கள் பதிவின் ஒரு சில இடங்களில் நான் மறுதலித்தாலும், பொதுவாக ஆமோதிக்கிறேன்..

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.