புரியாத உறவொன்றை உடுத்திக்கொண்டு....

எதுவென்று புரியா
புது உறவொன்று...
நீ என் நண்பியா?
என் காதலை சுமந்த
உன் கனவுகள் எதுவாகிப்போனது?
இன்னும்
என்னை காதலிப்பாயா பெண்ணே?
எதுவென்று புரியாத
உன் புது உறவில்
என் பாத்திரம் என்ன?
நான் யார்?
ஏதாவது சொல்லேன்
உன் மோனங்கள் களைந்து..
அழகாய்த்தான்
உடுத்துக் கொள்(ல்)கிறாய்-
மோனங்களை ஓர் கவசம் போல....
நாளைய
என் பிரயாணங்களில்
இன்னும்
உன்னையே இணைத்துள்ளேன்
ஆனாலும்
ஓரமாகியே நிற்கிறாய்
புரியாத உறவொன்றை உடுத்திக்கொண்டு....
__________________
No comments:
Post a Comment