Monday, May 24, 2010

தமிழ வளர்க்கிற எண்டா என்ன? : நானும் டவுட்டு சிங்காரமும்

            தென்னடா வம்பாப்போச்சு.. தமிழ் வளர்க்க கூப்பிடுறானே.. அது இது என்று யோசிக்க வேணாம் மக்காள். தமிழக முதல்வர்தான் தமிழ் வளர்க்காரே உனக்கென்ன தேவை இல்லாத வேலை என்றும் யாரும் கேட்டுவிடாதீர்கள். நான் தன்மான சிங்கம் ( கலைஞரின் “பெண்சிங்கம்” இல்ல ) உயிரை விட்டுவிடுவேன். முதல்வருக்கு ஒரு சிறு உதவியா இதை செய்யலாம் என்ற ஒரு பொது நோக்கில் (?##@). ராமருக்கு உதவிய அணில் பிள்ளை போல .. ( அணிலுக்கு மூணு கோடு கிடைத்தது. எனக்கு என்ன கிடைக்குமோ??)

எங்கூட எப்பவும் ஒருவன் ஒட்டிக்கு உலாத்துவான். அவண்ட பேர் டவுட்டு சிங்காரம். பாவிப்பய சில வேளைகள்ள கேப்பான் பாருங்கோ டவுட்டுகள் அப்பா……. வடிவேலு மாதிரி அவ்வ் முடியல என்கிற ரகம். அப்படித்தான் ஒரு நாள் மாட்டிக்கிட்டேன்.

“மச்சான்”… இது நம்ம டவுட்டு.. இப்பிடித்தான் ஆரம்பிப்பான்.

ஆகா.. ஆரம்பிச்சிட்டான்யா என நினைத்தவாறே.. “என்ன” என்றேன்.

டவுட்டு :     சின்ன டவுட்டு ( தலையை சொறிகின்றான் )
நான் :        அதான் உனக்கு அடிக்கடி வருமே , சொறியாம சொல்லு.
டவுட்டு :     தமிழ் வளர்க்கிற எண்டா என்ன மச்சான் ?

கேட்டான் பாரு ஒரு கேள்விய.. ஆஹா.. அலர்ட் ஆகிக்கடா ஆறுமுகம் என உள்ளே ஒரு பட்சி அலறியது..

நான் ;        தமிழ் வளர்க்கிற எண்டா , தமிழ இன்னும் ஸ்ட்ரோங்கா ஆக்கிற.. அதாவது தமிழ முன்னேற்றுற..

என உளறிக்கொண்டிருந்தேன் ( தெரிஞ்சாத்தானே? சொல்ல )
மீண்டும் தொடங்கினான்.

டவுட்டு :     அப்ப தமிழ் இப்ப சீக்கு வந்து கிடக்கா?
                ரொம்ப சீரியசா முகத்த வச்சிக்கு அவன் கேட்ட கேள்வியால் எனக்கு கிர்                   அடித்தது..
கதைய மாற்றினாத்தான் தப்பலாம்.

நான் :                சரி இப்ப ஏன் இந்த டவுட் உனக்கு ? என்றேன்
டவுட் :       இல்ல நம்ம முதல்வர் தமிழ் வளர்க்க பாடுபடுறார் எண்டு ஒரு பேப்பர்ல பார்த்தன் அதான் என இழுத்தான்..
நான் :                அதானா சங்கதி.. எப்பிடி தமிழ் வளர்க்காராம்??

இப்போ நான் கொளுக்கிய போட்டேன். ரொம்ப குசியாகிட்டான் பய..

டவுட்டு :     உனக்கு தெரியாதா ? சொல்றன் கேளு. ஒன்னு ரெண்டு இல்ல நெறய இருக்கு.
நான் :         அப்புடியா ?
டவுட்டு :     ஆமாண்டா.. சொல்றன் கேளு , அவர் முத்தமிழ் அறிஞர் தெரியுமுல்ல??
நான் :         ???????????
டவுட்டு :     முழிக்காத! அவர் முத்தமிழ் அறிஞர். தமிழ வளர்க்க – வள்ளுவர் சிலை வச்சிருக்கார், கண்ணகி சிலைய திரும்ப மெரீனா பீச்சில வச்சிருக்கார், தமிழ் படத்துக்கு தமிழ்ல பேர் வச்சா வரிவிலக்கு அறிவிச்சிருக்கார், இப்பவும் சினிமாவுக்கெல்லாம் கதை எழுதுறார், இதெல்லாம் விட முக்கியம் இப்ப செம்மொழி மாநாடு நடத்துறார். இதெல்லாத்தையும் விட வேற என்ன ஆதாரம் வேண்டும்? எண்டு அந்த பேப்பர் ல போட்டிருக்கான் மச்சான்
பயபுள்ள ரொம்பத்தான் குழம்பி இருக்கான். மீண்டும் தொடர்ந்தான்

டவுட்டு :     சரி மச்சான் இதால எப்பிடிடா தமிழ் வளருது?

ஆஹா.. விட்ட இடத்துக்கே வாறானே

நான் :        அது வந்து……….. சரி கேளு..வள்ளுவர் சிலையால தமிழ் வளருமோ இல்லையோ அந்த் சிலைய செஞ்ச கண்ராக்டர் வயிறு வளந்திருக்கும். அத விடு.. சினிமாக்கு தமிழ்ல பேர் வச்சா வரி விலக்கு அளிக்கிறதால சினிமாக்காரங்க தமிழ வளர்க்காங்க ஆனா அது எப்புடி எண்டு ஒன்னப்போல என்னப்போல படிக்காத தற்குறிக்கெல்லாம் புரியாது.

டவுட்டு :     அப்பிடியா? சரி அத விடு.. அவர் சினிமாக்கு கதை எழுதுறதால எப்பிடிடா தமிழ் வளரும்?

ரொம்ப அப்பாவியா இருக்கானே என்று பரிதாபமாக இருந்தது..

நான் :        அவரின் சினிமா வசனங்கள கேட்டு , யாராவது ஐயோ, அம்மா எண்டு அலறுவாங்கல்ல,, அப்ப வளருமோ என்னவோ?
என்றேன். ரொம்ப சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு..

ஓஹோ! எனத்தலையாட்டினான் நம்ம டவுட்டு. ஏதொ யோசனையில இருந்தவன், திடீரென,
“அப்ப செம்மொழி மாநாடு ……..” என இழுத்தான்.

இன்னைக்கு விடமாடான் போல. என எண்ணிக்கொண்டே.
நான் :        டேய் இதுதான் முதல்வரிண்ட மிகப்பெரிய தமிழ் வளர்ப்பு சாதனை. எப்பிடி எண்டு கேள்.. இப்ப உலகத்துல இருக்கிற எல்லா தமிழ் பேசும் மக்களும் சந்தோசமா  ஒரு பிரச்சினையும் இல்லாம இருக்காங்க..
என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே………..  “என்ன?” என இரைந்து கொண்டே குறுக்கிட்டான்.
நிமிர்ந்து பார்த்தேன்.
“ நீ எப்பிடி எல்லோரும் சந்தோசமா , பிரச்சினை இல்லாம இருக்காங்க எண்டு சொல்லுவாய்” என உறுமிக்கொண்டு நின்ற அவனை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கலக்கம் பிடித்துக்கொண்டது. சமாளித்துக்கொண்டே,

“நீ எங்க வாறாய் எண்டு எனக்கு விளங்குது.. அத எல்லாம் நம்முட முதல்வர் – ஒரு மணித்தியால உண்ணாவிரதம் இருந்து கிளியர் ஆக்கிட்டார் தெரியாதா உனக்கு” என்றேன்.

டவுட்டு :     ( மீண்டும் தலைய சொறிந்தான் )

ஆஹா.. பய குழம்பிட்டான் இதுக்குள்ள வண்டியவிட்டாத்தான் வீடு போக முடியும் என எண்ணிக்கொண்டே,
“ஆகவே எல்லோரும் சந்தோசமா இருக்காங்க சரியா?” என்றேன். அரைகுறையாய் தலையை ஆட்டிக்கொண்டான் நம்ம சிங்காரம்.

நான் :        இப்ப நம்ம அடுத்த குறி என்ன? கலை இலக்கியம் மொழி என வளர்க்க வேண்டியதுதான். அதான் அவர் சினிமாவுக்கு எழுதுறார். பாராட்டு விழாக்கு போறார். செம்மொழி மாநாடு நடத்துறார்.

டவுட்டு :     ஓ! அதானா..

நான் :        பின்ன ? அவர் தமிழின தலைவர் அல்லவா? அவர நாமழும் பின்பற்றனும் சரியா?

டவுட்டு :     பின்பற்றுற எண்டா?

உன் டவுட்டுகள்ல பெற்றோல ஊத்திக்கொளுத்த என சபித்துக்கொண்டே ,

நான் :        இப்ப பார், அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு செம்மொழி மாநாடு நடத்தப்போறார். மாநாட்டு பந்தலுக்கே 5.5 கோடி இந்திய ரூபா செலவு செய்றார். மாநாட்டு சமையலுக்கே 10 சமையல் கொன்றாக்டர்கள் வாறாங்க..இப்பிடி செலவு செஞ்சி செய்ற மாநாடுக்கு நீயும் போய் சாப்பிட்டு விட்டு அவருக்கும் ஒரு கோசம் போட்டுவிட்டு வரணும் புரியுதா?

டவுட்டு :     இவ்வளவு செலவா இதுக்கு? இந்த காச எல்லாம்….

என தொடங்கியவனை மறித்து, “ இதப்பார் சிங்காரம்! நான் முந்தியே சொல்லிட்டன் இஞ்ச யாரும் கஷ்டப்படல்ல” என்றேன் சற்று கடினமாக..
பயல் அடங்கிவிட்டான்.
சற்று நேர மௌனத்திற்கு பிறகு…

டவுட்டு :     நீ இன்னும் என்ர கேள்விக்கு பதில் சொல்லலயே??

நான் :                என்ன?

டவுட்டு :     தமிழ் இப்ப சீக்கா கிடக்கா? தமிழ வளர்க்க?

ஆஹா.. தொடங்கின எடத்துக்கே வாறானே!!! ஆள விர்றா சாமி..

டவுட்டு :     டேய் டேய் நில்லு மச்சான்.. நான் ஒண்டும் கேட்கல்ல நில்றா..

அது எனக்கு கேட்டாத்தானே!!!!!!!


No comments: