நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,


நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,

நன்றி.
நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,
தொட்டுச்செல்லும் உன் பார்வைகளினை
இன்னும் நான் சேமிக்கிறேன்.
ஓர் சிறுவனைப் போல.....

பச்சை உடுத்தி,
பார்வைகளால் பந்தாடிப்போனாய்
மழையாகிப் போனேன்.
நன்றி நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி

ஓர் துயரம் நோக்கி
நீ செலுத்துகின்ற எம் உறவுகளில்
இயலுமானவரை
நான் இனிமைகளை பொறுக்கி கொள்கிறேன்.
நீ இல்லா பொழுதுகளில்,
என் தொலைதல் நிறைவேறும் நாட்களில்,
உன் மகிழ்வுகளையும்
உன் பார்வைகளையும் எடுத்து பார்க்க....

நீளப்போகின்ற
என் தொலைதல்
உன்னை நீங்கி அல்ல.

ஓர் வழிகின்ற காதலின் பாத்திரமாகும் வரை
நான் காத்து கிடப்பேன்
உன் பார்வைகளையும்
நம் காதலையும் சுமந்து கொண்டு..............

Comments

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.