திரையிசை பாடல்கள் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, பிடித்திருந்தால் ரசிப்பதையும் திரும்ப அதன் வரிகளினையும் அசை மீட்டுவதையும் தவிர.இந்த - தாளம் ராகம், சங்கதி சமாச்சாரம் எல்லாம் என்னிலிருந்து ஏழு மலை ஏழு கடல் தாண்டிய விடயங்கள். ஒரு பாடலினை கேட்கும் போது, எனக்கு அதனை மீண்டும் கேட்க தோண்ரியது என்றால்- அது எனக்கு பிடித்த பாடல். இதுதான் எனது ரசனைக்கான அளவுகோல். மிக எளிதல்லவா? மீண்டும் கேட்க தூண்டுவது, இசை அல்லது வரிகளாக இருக்கும் அதையும் தாண்டினால், அது பாடியவர்களின் குரலாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்னால் ஒரு பாடலை எதேச்சையாக கேட்டேன்.. அதில் பாடும் அச்சிறுமியின் குரல், வார்த்தை பிரயோகங்கள் என்பன மீண்டும் அப்பாடலை கேட்க தூண்டின. வார்த்தைகளில் ஒன்ரும் அவ்வளவாக கனதி எதுவுமில்லை. என்றாலும் அப்பாடல் எதோ ஒர் வகையில் என்னை ஈர்த்தது. அது அக்குரல்.
அப்பாடல் – “ குட்டி குட்டி, குட்டிப்பிசாசே …” என்ற பாடல். கெட்ட சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையில் நடக்கும் வாய்த்தர்க்கம் இப்பாடல். மாறி மாறி இருவரும் சண்டை இடுவதும் சபதம் செய்வதும் என பாடல் செல்கின்றது. அதில் ஒலிக்கின்ற அச்சிறுமியின் குரலே என்னை ஈர்த்ததும் இதை எழுதத்தூண்டியதும். இது பற்றி மேலும் அறிய இணையத்தினை தோண்டிய போது. இது – “குட்டிப்பிசாசு” என்ற சிறுவர்களுக்கான திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதும், தேவா இசையமைத்துள்ளார் எனபதும் அறிய கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் தேவா என நினைக்கின்றேன். அச்சிருமியின் பெயரினை அறிய முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அதோடு இத்திரைப்படம் வெளிவந்துவிட்டதா?
அச்சிறுமியின் குரலில் வரும் பாடல் அடிகளில்,
“ ஏ வெத்தலையில மை பூசுற,
சாமபலடிக்கிற உன்ன நசுக்குற…. நீ எனக்கொரு பிஸ்கோத்து”
என்ற வரிகளில் கடைசியாக “பிஸ்கோத்து” என சொல்லும் போது எங்கிருந்தோ சிரிப்பு ஒட்டிக்கொள்கின்றது. அது அக்குரலுக்கே தனித்துவமான ஏற்ற இறக்கங்களால் என எண்ணுகின்றேன்.
இப்படம் பற்றியிம் இப்பாடல் பற்றியும் அறியும் ஆவலில் youtube “குட்டிப்பிசாசு” என கொடுத்து தேட முனைய்ம் போது, “ காளை” பட சிம்பு வந்து பயமுறுத்துகின்றார். அதனால் அம்முயற்சியினையும் கைவிட்டுவிட்டேன். ஆனாலும் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் பற்றி அறியும் ஆர்வம் மேலோங்கி உள்ளது. சில வேளைகளில் பாடல் ஒன்ரு கேட்கும் போது இருக்கும் அழகுணர்ச்சி அப்படலைனை திரையில் காணும் போது இருப்பதில்லை சொதப்பலாக இருக்கும். அது போல இப்பாடலும் இருந்துவிடுமோ என்கின்ற பதட்டம் எனக்குள் உள்ளது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
No comments:
Post a Comment