தொக்கி நிற்கும் கனவுகள்


இன்னும் எதிலொன்றோ

தொக்கி நிற்கின்றது
என் கனவுகள்.
மை பூசி படர்ந்த
கருமைகளில்,
எதை தேடிப்பெறுவேன்?
தொக்கி நிற்கும்
என் கனவுகளை!
தொலைந்த வாழ்க்கையை!


அத்வைதமாகிப் போன
என் கனவுகளிற்கிடப்பட்ட
கடிவாளங்கள்
அருபமாகி,
எங்கோ நிற்கின்றன....
சிகரங்களை நோக்கி
நான் விரட்டிய கனவுகள்
கண்ணீருடன்,
அரூபமான கடிவாளங்களிடம்
சரணடைந்தே போயின.


கனவுகளின் மரணம்
காலத்தால் ஓர் பக்கம் நிகழ்த்தப்பட,
விளங்க முடியா தடைகளும்
கனவு தின்று
சீரழிந்தே போயின
என் சுயத்தையும்,
இன்னும்
என் எச்சங்களையும்....


கனவின்றி இயக்கமேது?
இன்னும்
நான் உறைந்தே போனேன்.
என்
நிஷ்டை கலைத்து,
கனவுகளை மீட்டுத்தர

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!